Tuesday, June 23, 2015

தமிழ் சினிமாவில் கவனிகக் படாமல் போன நல்ல பல திரைப்படங்களின் தற்போதைய நிலை என்ன?


தமிழில் மட்டுமல்ல, எல்லா மொழிகளிலும் இன்று பல திரைப்படங்கள் வெளியீடு ஆகாமல் தவித்துக்கொண்டிருக்கின்றன.  இவை மட்டுமில்லாமல் பல படங்கள் வெளியீடு ஆனா பிறகும் குறுகிய நாட்களுக்குள் மறைந்து விடுகின்றன.

இந்த நிலைக்கு சில காரணங்கள் உண்டு.  இவற்றில் மிக முக்கியமானது படங்களின் தரம்.  கதை நன்றாகவே இருந்தாலும், திரைக்கதையில் உயிர் இல்லாமல் போகலாம்.  திரைக்கதை நன்றாக இருந்தாலும் இயக்குனர்களிடம் குறைவுகள் இருந்து படத்தை வழங்குவோர் அதாவது டிஸ்ட்ரிப்யூடர்கள் அதன் மீது நம்பிக்கை வைக்க முடியாமல் வாங்காமல் போய்விடலாம்.

அடுத்த காரணம் ஏராளமான படங்கள் தயார் ஆகுவது.  இது தமிழ்நாட்டைப்போல் ஏழு கோடி மக்கள் இருக்கும் மாநிலத்தில் ஒரு வருடத்தில் 450 படங்கள் வந்தால் எப்படி அவை மக்களிடம் கொண்டு சேர்க்கமுடியும்?

மற்றொரு காரணம் அதிக தியேட்டர்கள் இல்லாத நிலைமை. அந்த்ராவில் 1100 தியேட்டர்கள் உள்ளன.  தமிழ்நாட்டில் 800க்கும் குறைவான தியேட்டர்கள் உள்ளன.

தொலைக்காட்சியிலும் கேபுள் மூலமாகவும் ஓர் அளவு பிரபலமான அல்லது நன்றாக அடையாளம் தெரிந்த முகங்கள் இருந்தால் மட்டுமே படங்களை லாபகரமாக வாங்கி விற்பனை செய்ய முடியும் என்று ஒரு கருத்து உள்ளது.  புது முகங்கள் கொண்ட படங்கள் முதலில் வெளியீடு ஆகி தியேட்டர்களில் ஒரு வாரம் ஓடியிருந்தால், அப்படங்களுக்கு இந்த முறையில் மறுவாழ்வு கிடைக்க வாய்ப்பு உண்டு.

குறைவான முதலீடு போட்டு எடுக்கப்பட்ட படங்களின் தயாரிப்பாளர்கள் செய்யும் பெரிய தவறு, அவர்களிடம் விளம்பரத்திற்கும் மார்க்கெட்டிங் செய்வதற்கும் கையில் காசு இல்லாமல் படம் தயாரிப்பது.

தொடர்ந்து புது புது திரைப்படங்கள் வந்துகொண்டே இருக்கும் நிலையில், பழைய படங்களை மறப்பதே மனிதனில் இயல்பாகும்.

எல்லா விஷயங்களும் நன்றாக இருந்தும், ஓர் திரைப்படம் பிரபலம் ஆக ஓர் அளவு அதிர்ஷ்டமும் தேவை படவே செய்கின்றது!

இத்தனை கஷ்டங்களையும் எதிர்த்து பிரச்சனைகளையும் சமாளித்து, சில படங்கள் வெற்றி அடைகின்றன என்பது பாராட்டவேண்டிய விஷயம்.

சென்னையில் உள்ள பிரசாத் லேப்ஸ்ல் மட்டும் விற்காமல் அல்லது மறந்து போன நிலையில் 2500 க்கும் மேலான திரைப்படங்கள் கிடக்கின்றன.  இவைக்கு எந்த விதமான எதிர்காலமும் இல்லை என்பதுதான் என்னுடைய கணிப்பு.